அருச்சுனன் ஐயா போற்றி!

அருச்சுனன் ஐயா.. போற்றி!

ஶ்ரீ புற்று மகரிஷி குரு பரம்பரையின் 47-வது வாரிசு கே.பி.அருச்சுனன் ஐயா.
தன் வாழ்நாளின் கடைசிநாள் வரையில் வேலூரில் சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார் அருச்சுனன் ஐயா. இவர் கைபட்டு குணமாகாத நோயாளிகள் ஒருவருமில்லை! தீராத நோயென்று எதுவுமில்லை!

சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை உலகறியச் செய்யும் நோக்கில் வேலூரில் ஶ்ரீ புற்று மகரிஷி சித்த மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சேவை மையத்தினை நிறுவி, ஆயிரக்கணக்கான பரம்பரை வழி சித்த மருத்துவர்களுக்கும் சித்த மருத்துவ பட்டப்படிப்பை முடித்த இளையோருக்கும் நாடி பிடித்து நோயறிதல் உட்பட தான் கற்றுத்தேர்ந்த சித்த மருத்துவ இலக்கணங்களை கற்பித்தார். இவரிடம் பாடம் பயின்ற பலரும் இன்று உலகின் பல நாடுகளில் சித்த மருத்துவ சேவை புரிந்து வருகின்றனர்.

ஐயாவின் பொற்பாதங்கள் தொட்டு வணங்கி.. அவர் அருளிய சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை உலகறியச் செய்யும் முயற்சியை எங்களின் பிஞ்சு விரல்களுக்கு எட்டிய வகையில் இனிதே துவக்குகிறோம்!

அருச்சுனன் ஐயா.. போற்றி!