சர்க்கரை நோய் குறித்த நூல்கள் பெரும்பாலும் அலோபதி மருத்துவக் கண்ணோட்டத்திலேயே எழுதப்பட்டிருக்கும். ஆனால் இந்த நூல் சித்த மருத்துவரின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. நீரிழிவு நோய்க்கு ஒட்டுமொத்தமான சித்த மருத்துவ சிகிச்சையை எடுத்துரைப்பதோடு கூடவே இந்த நூல் நீரிழிவால் ஏற்படும் ஒவ்வொரு உடல் பாதிப்புக்கும் மேற்கொள்ள வேண்டிய சித்த மருத்துவ சிகிச்சை முறைகளையும் விரிவாக எடுத்துரைக்கின்றது. நீரிழிவை குணப்படுத்த அல்லது கட்டுப்படுத்த மருந்துகளோடு நான்கு” உ”க்கள் தேவை என நூல் முன்வைக்கிறது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உற்சாகம், உறக்கம் ஆகிய இந்த “உ”க்களையும் கடைபிடித்தால் நீரிழிவு நம்மை பிடிக்காது என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயின் ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு வந்தால் சித்த மருந்துகள் மூலம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி படிப்படியாக நீரிழிவை குணப்படுத்திவிடலாம் என டாக்டர் பாஸ்கரன் நம்பிக்கையுடன் கூறுகின்றார். அலோபதி சிகிச்சையோடு கூடவே சித்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம் என்பது புதிய செய்தியாகும். நீரிழிவு நோயாளியின் குடும்பத்தினர் எப்போதும் நோயாளிக்கு ஆதரவாக உறுதுணையாக இருக்க வேண்டும். வேளா வேளைக்கு மருந்து எடுத்துத் தருவதோடு “நாங்கள் இருக்கிறோம்… உங்களது சர்க்கரை நோயை சேர்ந்து வெல்வோம்” என்ற நம்பிக்கை உணர்வையும் குடும்பத்தார் ஏற்படுத்த வேண்டும். நீரிழிவு வராமல் தற்காத்துக் கொள்ளவும் வந்துவிட்டால் என்ன செய்வது என்றும் இந்நூல் எடுத்துரைக்கின்றது.
ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த நூல் இருப்பது அவசியமாகும். இந்த இரண்டாவது நூலையும் ஜோலார்பேட்டை தேநீர் பதிப்பகம் (9080909600) சித்த மருத்துவர் பாஸ்கரனின் இந்த இரண்டாவது நூலையும் சிறப்புற வெளியிட்டுள்ளது. வாங்கி படியுங்கள்.
