இந்த பதிவு உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்! ஆரோக்கியமானதாக மாற்றும்! பொறுமையாகவும் கவனமாகவும் படியுங்கள், பயன் பெறுங்கள்! வாழ்க வளமுடனும் பூரண நலமுடனும்! இந்த நாள் இனிய நாளாகட்டும்!
வேலூர் ஜலகண்டேசுவரர் ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கத்தை பிரதிருஷ்டை செய்தவர் ஶ்ரீ புற்று மகரிஷி. அகத்தியர் அருளிய சித்த மருத்துவத்தில் சிறப்பான ஆற்றல் கொண்டிருந்தவர் இவர். இவரது சீடர்களில் பழநியில் நவபாஷாண முருகனை பிரதிருஷ்டை செய்த போகரும் ஒருவர் என கருதப்படுகிறது.
ஶ்ரீ புற்று மகரிஷி குரு பரம்பரையின் 47-வது வாரிசு கே.பி.அருச்சுனன் ஐயா. தன் வாழ்நாளின் கடைசிநாள் வரையில் வேலூரில் சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார் ஐயா அவர்கள். இவர் கைபட்டு குணமாகாத நோயாளிகள் ஒருவருமில்லை! தீராத நோயென்று எதுவுமில்லை!
சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை உலகறியச் செய்யும் நோக்கில் வேலூரில் ஶ்ரீ புற்று மகரிஷி சித்த மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சேவை மையத்தினை நிறுவி, ஆயிரக்கணக்கான பரம்பரை வழி சித்த மருத்துவர்களுக்கும் சித்த மருத்துவ பட்டப்படிப்பை முடித்த இளையோருக்கும் நாடி பிடித்து நோயறிதல் உட்பட தான் கற்றுத்தேர்ந்த சித்த மருத்துவ இலக்கணங்களை கற்பித்தார். இவரிடம் பாடம் பயின்ற பலரும் இன்று உலகின் பல நாடுகளில் சித்த மருத்துவ சேவை புரிந்து வருகின்றனர்.
ஶ்ரீ புற்று மகரிஷி குரு வழி பரம்பரையின் 49-வது தலைமுறை வாரிசு சித்த மருத்துவர் பாஸ்கரன். பெரியப்பா அருச்சுனன் ஐயாவிடம் தனது நான்காம் வயது முதலாகவே நாடி பிடித்து நோயறியும் கலையை கற்றுக் கொள்ள ஆரம்பித்தவர் பாஸ்கரன்.
நாடி பிடித்து, ஒருவரின் சரீர ஜாதகத்தை துல்லியமாகக் கண்டறியும் சிறப்பு மிக்க சித்த மருத்துவராக இன்று நம்மிடையே வாழ்ந்து வருகிறார் பாஸ்கரன். அகத்தியரும், புற்று மகரிஷியும், அருச்சுனன் ஐயாவும் அருளிச்சென்ற சித்த மருத்துவ குறிப்புகளைக் கொண்டு சகல நோய்களுக்கும் தீர்வு அளிக்கிறார். நீரிழிவு, புற்றுநோய், மலக்கட்டு, தைராய்டு, தூக்கமின்மை, சைனஸ், மன அழுத்தம், முடி உதிர்தல், மூலம், மூட்டுவலி, அல்சர், இதயநோய்கள், சொரியாசிஸ், தோல்நோய்கள், கல்லீரல் – சிறுநீரக பிரச்னைகள், ஆண்மை குறைவு, குழந்தையின்மை, கருப்பை பிரச்னைகள் உட்பட சகல நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சையளித்து குணப்படுத்துகிறார்.
மூலிகைகளுடன் தான் கழிந்தது பாஸ்கரனின் இளம்பருவம். குருகுல படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும், முறையே சித்த மருத்துவ பட்டப்படிப்பையும் (B.S.M.S. – Bachelor of Siddha Medicine and Surgery) முடித்திருக்கிறார்.
மத்திய அரசின் வேளான் துறையின் கீழ் இயங்கிவரும் இம்ப்காப்ஸ் (IMPCOPS – The Indian Medical Practitioners’ Co-operative Pharmacy and Stores Ltd) நிறுவனத்தின் இயக்குநராகவும் தேர்வாகி இருக்கும் மருத்துவர் பாஸ்கரனின் சித்த மருத்துவ புலமைக்கு அவரால் குணமடைந்த – குணமடைந்து வரும் – குணமடையப்போகும் நலம்நாடிகளின் பாராட்டுக்களே சாட்சியாகும்!
சித்த மருத்துவர் பாஸ்கரனின் சிறப்பான சித்த மருத்துவ சிகிச்சை குறித்து பிரமிப்புடன் பாராட்டுகிறார்கள் பெருமதிப்புக்குரிய ஆளுமைகள் பலரும்.
“அற்புதமான சித்த மருத்துவர் பாஸ்கரன். டயாலிசிஸ் செய்து கொள்ளும் நிலைக்குச் சென்று விட்ட சர்க்கரை நோயாளிகள் பலருக்கு சிகிச்சையளித்து நோயிலிருந்து மீட்டெடுத்துக் கொடுத்துள்ளார். சர்க்கரை குறைபாடு, சொரியாசிஸ் உட்பட பல்வேறு தோல் நோய்கள், நாள்பட்ட சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், மூட்டுவலி நோய்கள், ஒற்றைத்தலைவலி, புற்று நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சையளித்து, குணப்படுத்தி வருகிறார்” என பாராட்டுகிறார் மூத்த ஊடகவியலாளரான ஜி கௌதம்.
“மருத்துவர் பாஸ்கரன் இளைஞர். மிகவும் சிநேகபூர்வமானவர். மிக இனிமையாகப் பேசக் கூடியவர். பதினென் சித்தர்களின் மரபில் வந்தவர். நவீன முறையிலும் படித்துப் பட்டம் வாங்கியவர். இன்னொரு முக்கியமான விஷயம். நம் பாரம்பரிய வைத்திய முறைகளை ஐந்து ஆண்டுகளில் கற்றுக் கொள்வது சாத்தியம் இல்லை. பத்து வயதிலிருந்தே தொடங்கி இருபது ஆண்டுகள் ஒரு குருவுடன் தங்கிக் கற்றுக் கொள்ள வேண்டியது. பாஸ்கரனின் மூதாதையர் அனைவருமே பரம்பரை பரம்பரையாக சித்த மருத்துவர்கள். அதனால்தான் பாஸ்கரனுக்கு நாடியில் கை வைத்ததுமே நோயாளியின் சரீர ஜாதகம் தெரிந்து விடுகிறது. சித்த மருத்துவர் பாஸ்கரனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என அறிவுறுத்துகிறார் பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா.
“சமீபத்தில் என் வாசகர் ஒருவருக்கு (வயது 61) prostrate gland வீங்கி அலோபதியில் அறுவை சிகிச்சைக்கு சிபாரிசு செய்து இருக்கிறார்கள். அவர் சித்த மருத்துவர் பாஸ்கரனிடம் சென்றார். ஒரு மாத காலத்தில் அறுவை சிகிச்சை தேவையில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார். இதுதான் சித்த மருத்துவத்தின் சிறப்பு. இதை நீங்கள் பிரச்சாரம் என்று நினைத்தாலும் பரவாயில்லை. இதை நான் மருத்துவர் பாஸ்கரன் பற்றி எழுதுவதாக நினைக்கவில்லை. போகர், கோரக்கர் பற்றி எழுதுவதாகவே நினைக்கிறேன். நம் அருகில் உள்ள பாஸ்கரனின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என தன் இணைய தளத்தில் அறிவுறுத்தியிருக்கிறார் எழுத்தாளர் சாருநிவேதிதா.
“மொத்தம் எட்டு பேர் சென்றிருந்தோம். யாருமே எங்களுக்கு என்ன பிரச்னை என்று அவரிடம் வாய் திறந்து சொல்லவில்லை. யாரையுமே அவருக்கு முன்பே தெரியவும் தெரியாது. ஆண்களுக்கு வலது கை மணிக்கட்டிலும், பெண்களுக்கு இடது கை மணிக்கட்டிலும் சில நொடிகள் நாடி பிடித்துப் பார்த்தே என்ன பிரச்னை என்று மிகத் துல்லியமாகச் சொன்னார் மருத்துவர் பாஸ்கரன். நண்பரொருவருக்கு சிறு வயது முதல் கழுத்து வலி. அதையும் கூடச் சரியாகச் சொன்னார் மருத்துவர். இதேதான் மற்றவர்களுக்கும். ஆச்சரியப்பட்டுப் போனோம்” எனக் குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிகையாளரான ‘மாயவரத்தான்’ ரமேஷ்குமார்.
பாஸ்கரனிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் தனது சர்க்கரை அளவு படிப்படியாக குறைந்து வந்திருப்பதையும், சர்க்கரையின் காரணமாக கண் பார்வை மங்கியது சரியானதையும் ஃபாலோஅப் பதிவாக, மெடிகல் ரிப்போர்ட்களுடன் வெளியிட்டிருக்கிறார் மாயவரத்தான் ரமேஷ்குமார்.
“வந்த நோயை மட்டுமல்ல, வரப்போகும் நோய்கள் குறித்தும் எச்சரித்து, அவற்றை விரட்டும் சிகிச்சைகளையும் தருவது டாக்டர் பாஸ்கரனின் பெருங்கருணை. வேலூர் ஸ்ரீ புற்று மகரிஷி பரம்பரையில் முற்றும் அறிந்த மருத்துவ முனிவர்போல் வந்திருக்கும் டாக்டர் பாஸ்கரன், வாடி நிற்கும் நோயாளிகளின் நாடி பிடித்து நலம் எனும் வரம் தரக் காத்திருக்கிறார். நாடிச்சென்று அவரை சந்திக்க வேண்டியது அவரவர் கடமை” என பாராட்டி மகிழ்கிறார் மூத்த பத்திரிகையாளரான எம்.பி.உதயசூரியன்.
“சித்த மருத்துவத்தில் நாடி வைத்திய முறை சிறப்பு மிக்கது. ஒருவரின் நாடி பிடித்துப் பார்த்தே அவர் உடலில் உள்ள நோய்களைக் கண்டு பிடித்து, உரிய மருந்தைக் கொடுக்கும் வைத்தியர்கள் முன்பு இருந்தார்கள். இப்போதும் சிலர் அக்கலையில் கற்று தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். வேலூர் சத்துவாச்சாரியில் சித்த மருத்துவர் பாஸ்கரன் அவர்கள் நாடி வைத்தியத்தில் சிறப்பான சேவை செய்து வருகிறார்” என்று பாராட்டி, மருத்துவர் பாஸ்கரன் அவர்களின் நேர்காணலை வெளியிட்டிருக்கிறது விகடகவி மின்னிதழ்.
எழுத்தாளர் சாருநிவேதிதா இன்னொரு பதிவில் எழுதியிருப்பது.. “நேற்று சித்த மருத்துவர் பாஸ்கரனிடம் விரிவாகப் பேசினேன். ஜுரம் அதிகமாகி கைகால்கள் நடுங்கும் நிலைக்குப் போனால் கூட அதைச் சட்டென்று குணப்படுத்தும் மருந்துகள் (அலோபதியின் டோலோ போல) சித்த மருத்துவத்திலும் உண்டு, நான் அப்படி ஆயிரக்கணக்கான பேரை குணப்படுத்தியிருக்கிறேன் என்றார். நேற்று வேலூரிலிருந்து சில மருந்துகளைக் கொடுத்து அனுப்பியிருந்தார் மருத்துவர் பாஸ்கரன். நேற்று இரவு அந்த மருந்துகளை உட்கொண்டேன். கிட்டத்தட்ட 75 சதம் குணமாகி விட்டேன். ஒரே வேளை”.
HbA1C 9.5%-ஐயெல்லாம் தொட்டு நடனமாடிக் கொண்டிருந்த தனது சர்க்கரை 7.8% ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கும் மூத்த பத்திரிகையாளரான ‘மாயவரத்தான்’ ரமேஷ்குமார், “சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரையில் தாமதமாகத்தான் பலன் தெரியும் என்பார்கள். ஆனாலும் எனக்கு இரண்டு மாதங்களிலேயே நன்கு மாற்றம் தெரிகிறது. பாஸ்கரனிடம் சிகிச்சைக்குச் செல்லும் நண்பர்கள் பலரும் பயன்பெற்று வருவதைச் சொல்கிறார்கள்” என்றும் தெரிவித்திருக்கிறார்.
தனது அம்மாவின் பல ஆண்டு கால மூட்டுவலி மற்றும் கால்வலிப் பிரச்னை நிரந்தரமாக தொலைந்து போனதாகவும், 11.7%த்தில் இருந்த தனது சர்க்கரை அளவு நார்மல் நிலையை அடைந்து வருவதாக நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார் மூத்த ஊடகவியலாளரான ஜி கௌதம்.
சித்தமருத்துவம் குறித்தும் நமது சித்தமருத்துவர் பாஸ்கரன் குறித்தும் மீண்டும் ஒரு முறை விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார் பெருமதிப்புக்குரிய எழுத்தாளரான சாருநிவேதிதா அவர்கள்..
“எத்தனையோ முறை இங்கே நான் எழுதி விட்டேன். ஐயா, ஷுகர் ஷுகர் என்று கூவாதீர்கள். என் நண்பரும் சித்த மருத்துவருமான பாஸ்கரனிடம் சென்றால் அவர் சர்க்கரை வியாதியை குணப்படுத்துகிறார். சர்க்கரை வியாதியால் மிகப் பெரிய பிரச்சினையை சந்தித்தவர்களையெல்லாம் அவர் குணப்படுத்துவது பற்றி ஃபேஸ்புக்கில் பலரும் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். இது பாஸ்கரனின் கண்டுபிடிப்பு அல்ல. அகத்தியரும் போகரும் மற்ற பல சித்தர்களும் கண்டு பிடித்து எழுதி வைத்திருக்கிறார்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். நேற்று கூட ஒருவர் அவருடைய அலுவலகத்தில் எல்லோருக்குமே ஷுகர் ப்ராப்ளம் என்கிறார். என் தளத்தை தினமும் படிப்பவர்தான். நான் வாயே திறக்கவில்லை. ஏனென்றால், பாஸ்கரனிடம் செல்லவில்லையா என்று நான் கேட்டால் அதற்கு ஏதாவது பதில் சொல்லி ஹி ஹி என்று இளிப்பார்கள். எதற்கு என்று விட்டு விட்டேன்.
என் நண்பர் ஒருவர். கொரோனாவில் அடிபட்டு, நுகரும் நரம்புகளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. கொத்தமல்லிக் கீரை பெட்ரோல் நாற்றம் நாறுகிறது. காஃபி வேறு ஏதோ நாற்றம் வருகிறது. இப்படிப் பெரும் குழப்பம். எந்த மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியவில்லை. பாஸ்கரனிடம் சொன்னேன். மருந்து கொடுத்தார். ஒரே மாதத்தில் பெரும் மாற்றம் தெரிகிறது. இப்போது கொத்துமல்லியில் பெட்ரோல் மணம் இல்லை. பூரண குணம் இல்லை. ஆனால் குணமாகி வருகிறது. பாஸ்கரனிடம் சொன்னேன். சித்தர்களின் சாதனை என்றார். அவருக்கே இது ஒரு சவால் என்றுதான் சொல்லியிருந்தார்.
இரண்டு மூன்று தினங்களாக என் வலது கண் துடித்துக் கொண்டே இருந்தது. வேலை செய்வதற்கு அது இடைஞ்சலாக இருந்ததால் கண் மருத்துவரிடம் போகலாமா, பாஸ்கரனைக் கேட்கலாமா என்று குழம்பினேன். கண் மருத்துவர் கேடராக்ட் என்பார். பாஸ்கரனை நாடினேன். அவர் அகத்தியரின் நயன விதி நூலின் பிரகாரம் மருந்து செய்து தருகிறேன் என்றார்.
சித்த மருத்துவத்தின் மூலம் புற்று நோயைக் கூட குணப்படுத்தலாம். சிறுநீரகப் பிரச்சினையை குணப்படுத்தலாம். இதய நோயைக் குணப்படுத்தலாம். நான் பாஸ்கரனின் பி.ஆர்.ஓ. அல்ல. உங்களின் நலம் விரும்பி. எல்லோரும் இன்புற்றிருப்பதுதான் என் நோக்கம்”
என எழுதியிருக்கிறார் சாருநிவேதிதா அவர்கள்.
சித்தமருத்துவத்தின் சிறப்புகளை இணைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதை தொடர்ந்து செய்துவரும் சாருநிவேதிதா அவர்களை வாழ்வாங்கு வாழ வாழ்த்தி நன்றி தெரிவித்துக் கொள்கிறது புற்றுமகரிஷி சித்தமருத்துவம். அகத்தியரில் ஆரம்பித்து அத்தனை சித்தர்களும் அவருக்கு அளப்பறிய ஆசிகளை வழங்கட்டும்!
சாருநிவேதிதா அவர்கள் எழுதியிருக்கும் சமீபத்திய பதிவும் மருத்துவர் பாஸ்கரனின் மகத்துவத்தை வலியுறுத்துகிறது. “நான் இங்கே என்னுடைய இந்த இணையதளத்தில் சர்க்கரை வியாதி உள்ள எல்லோரையும் கூவிக் கூவி அழைத்துக்கொண்டிருக்கிறேன். என் நண்பர் சித்த மருத்துவர் பாஸ்கரன் ஒவ்வொரு சர்க்கரை வியாதிக்காரரையும் சவால்விட்டு குணப்படுத்திக்கொண்டிருக்கிறார். சர்க்கரை வியாதி முற்றி கண் பார்வை லேசாக மங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளைக்கூட முழுமையாக குணப்படுத்தியிருக்கிறார். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, எது சாப்பிட்டாலும் பெட்ரோல் நாற்றம் வரும் பிரச்சினையில் இருந்தார். அவருக்கே அது பாதி குணமாகிவிட்டது. பாதி குணமானதும் அவர் பாஸ்கரனின் மருந்தை சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். நான்தான் அவரைக் கண்டித்து தொடர்ந்து மருந்து சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினேன். நான் ஒன்றும் பாஸ்கரனின் பிரச்சாரகன் அல்ல.
போகரிடமிருந்தும் இன்னும் அவரது மூத்தோரிடமிருந்தும் தொடங்கி, கோரக்கர் மற்றும் அவரது தொடர்ச்சியாக எண்ணற்ற சித்த மருத்துவ மேதைகளின் வழியாக, புற்று மகரிஷியிடம் மருத்துவம் பயின்ற பாஸ்கரனின் மூதாதையரிடமிருந்து இவருக்கு வந்து கிடைத்த நமது சொத்தான சித்த மருத்துவத்தையே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறேன்.
அந்த எழுத்தாளர் நண்பர் என் இணையதளத்தைப் படிப்பதில்லை என்று நினைக்கிறேன். நானே குறுக்கிட்டு சொல்லியிருக்கலாம். கேட்க மாட்டார்கள். நம்ப மாட்டார்கள். அதனால் சொல்லவில்லை. என்னை வாசிக்கும் உங்களிடம் சொல்கிறேன். பாஸ்கரனின் மருந்தை முயற்சி செய்து பாருங்கள். வேலை செய்யாவிட்டால் விட்டுவிடுங்கள் என்றுதான் சொல்கிறேன். இதுவரை ஒருவர்கூட வேலை செய்யவில்லை என்று சொன்னதில்லை!”
பத்திரிகையாளர் அரவிந்த் சுவாமிநாதன் அவர்களின் ஃபேஸ்புக் பதிவு இது:
“சில பல நாட்களாகவே ஃபேஸ்புக் வர இயலவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட கடும் உடல்நலக் குறைவு தான் காரணம். மிக முக்கிய காரணம் கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தொடரும் உடல் நலப் பிரச்சனைகள் தான். அல்சர், லிவர் பிரச்சனை, இவற்றோடு கடும் மூட்டு வலி. அலோபதியில் காண்பித்ததில் அல்சர், லிவர் பிரச்சனை அதிகமானதே தவிர (வலி நீக்கி மருந்துகளால்) வலி குறையவில்லை. இவற்றோடு செர்விகல் ஸ்பாண்டிலைடிஸ். கழுத்து வலி எப்போதும். கணினியில் அமர்ந்து வேலை செய்வதே கஷ்டமாக இருந்தது. அலோபதி சரியில்லை என்று ஆயுர்வேதம் எடுத்துக் கொண்டதில் கிட்னி ஸ்டோன் வந்து பெரும் அவஸ்தை ஆகி விட்டது. ஏனோ எனக்கு ஆயுர்வேதம் ஒத்துக்கொள்ளவில்லை. முன்பும் சில பிரச்சனைகளுக்காக ஆயுர்வேத மருந்துகள் சாப்பிட்டதில் கஷாயங்களின் வீரியம் தாங்காமல் பைல்ஸ் வந்துவிட்டது. தற்போது கிட்னி ஸ்டோன்.
எங்கும் எப்போதும் இலவசமாகக் கிடைக்கும் ஆலோசனைகள் எனக்கும் கிடைத்தன. ‘உடல் எடைதான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். வாக்கிங் போ… சரியாகி விடும்…’. ஐயா, எனக்கு நடக்கவே முடியாத அளவிற்கு மூட்டு வலிப் பிரச்சனை என்று ஒவ்வொருவரிடமும் விளக்கிக் கொண்டிருக்க என்னால் இயலவில்லை. சுகர் பிரச்சனை வேறு தொடர் கதையாய். ‘மூட்டு வலி வந்தால் அவ்வளவுதான். தீரவே தீராது’ என்று வேறு சிலரது பயமுறுத்தல்கள். அதற்குச் சான்றாக நான்றிந்த சில பேர் தீராத மூட்டு வலியால் அவஸ்தைப்பட்டது நினைவுக்கு வந்தது.
என்ன செய்வது, எப்படி மீள்வது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருகையில் தான் சித்த மருத்துவர், இம்காப்ஸின் வேலூர் பிரிவுத் தலைவர் டாக்டர் பாஸ்கரன் பற்றிக் கேள்வியுற்றேன். அவர் சென்னைக்கும் வாரா வாரம் வருகிறார் என்பதை அறிந்து அவரைச் சந்தித்தேன். நான் எனது நோய் பற்றிச் சொல்லும் முன்பே ‘நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம்; கையை மட்டும் கொடுங்கள்” என்றார். கை நீட்டியதும் நாடி பார்த்து என் பிரச்சனைகள் எல்லாவற்றையும் – நான் எதுவும் சொல்லாமலேயே -சொல்லி விட்டார். மட்டுமல்ல; “மருந்துகள் தருகிறேன். ஆனால் நீங்கள் சொன்ன நோய்களுக்கு அல்ல. அந்த நோய்க்குக் காரணமான பிரச்சனைகளுக்கு. உங்களுக்கு வாதம் அரைப் பங்கு அதிகரித்திருக்கிறது. அதுதான் எல்லாவற்றிற்கும் காரணம். இந்த மருந்துகளைச் சாப்பிடுங்கள் சரியாகி விடும். ஆனால், மெதுவாகத் தான் குணமாகும்” என்றார்.
காபி, டீ வேண்டாம் என்றார். நான் காபி பிரியன் என்றாலும் சமீபமாக காபியை நிறுத்தி இருந்தேன். உப்பு, சர்க்கரை, காரம் அதிகம் சேர்ப்பதில்லை. புளியும் அதிகம் சேர்ப்பதில்லை. ஆனால், சமீபத்தில் தக்காளி விலையேற்றம் காரணமாகக் கொஞ்சம் புளி சேர்த்து வந்தோம். அதுவும் வாதம் அதிகமாகக் காரணம் என்பதால் உடனடியாக அதனை நிறுத்தினோம்.
சித்த மருத்துவர் டாக்டர் பாஸ்கரன் சொன்ன முறைப்படி மருந்துகளைச் சாப்பிட்டு வந்தேன். ஒரே மாதத்தில் மூட்டு வலி கொஞ்சம் கொஞ்சம்க் குறைந்து சரியாகிவிட்டது. டாக்டர்பாஸ்கரன் அளித்த மருந்துகளே காரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
எனது மற்ற பிரச்சனைகளுக்கும் மருந்துகளைத் தந்திருக்கிறார். சாப்பிட்டு வருகிறேன். மட்டுமல்ல; சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட கடும் காய்ச்சலுக்கும் மருந்துகள் அளித்துள்ளார். நல்ல குணம் தெரிகிறது. நான் மட்டுமல்ல; பாஸ்கரனைச் சந்திக்க வந்த பலரும் அதைத் தான் சொல்கிறார்கள். டாக்டர் பாஸ்கரன் மருத்துவ உலகிற்குக் கிடைத்திருக்கும் ஒரு கொடை என்று நிச்சயமாகச் சொல்வேன். நோய்களால் பல பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், நிச்சயம் அவரைச் சந்தித்தால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
வேலூர், சென்னை, புதுச்சேரி, கோவை, திண்டுக்கல் என்று தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து நோய் நீக்கி வருகிறார் டாக்டர் பாஸ்கரன்” என்று எழுதியிருக்கிறார் அரவிந்த் சுவாமிநாதன்.
வட அமெரிக்காவில் இருந்து வெளியாகும் மதிப்புக்குரிய ‘தென்றல்’ தமிழ் மாத இதழுக்காக அரவிந்த் சுவாமிந்தாதன் அவர்கள் மருத்துவர் பாஸ்கரன் அவர்களை நேர்காணல் செய்திருக்கிறார். நவம்பர் பதிப்பில் வெளியாகி இருக்கும் அந்த நேர்காணல் பக்கங்களின் தொகுப்பு இந்த இணைப்பில் உள்ளது.
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் என்ன?
சித்த மருத்துவத்துக்கும் ஆயுர்வேத மருத்துவத்துக்கும் என்ன வித்தியாசம்?
சித்த மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா?
சித்த மருந்துகளில் உலோகங்கள் கலப்பதால் உடலுக்கு தீங்கு விளையுமா?
நாடி பார்த்து நோயறியும் சூட்சுமம் என்ன?
– இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் சித்த மருத்துவர் பாஸ்கரன்.
“நாள்பட்ட மற்றும் தீர்க்கமுடியாத நோய்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறார் மருத்துவர் பாஸ்கரன். அப்படிப்பட்ட மருத்துவரை வாழ்த்துவதுடன் நலக்குறைவுகள் நீங்க மருத்துவரை நாடி நலம் பெறலாம்.” என்று பாராட்டுகிறார் எழுத்தாளரும், சிகிச்சையாளருமான மரிய பெல்ஸின்.
வாழ்க வளமுடனும் பூரண நலமுடனும்!